undefined

மோடி வருகை  தரும்   பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்.1ம் தேதி மோடி தேரா சச்கந்த் பல்லன் செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளது. இதனால் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகங்கள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் இல்லாததால் பதற்றம் தவிர்க்கப்பட்டது.

அதேபோல் தேரா சச்கந்த் பல்லன் வளாகத்திலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மிரட்டல் மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!