பத்திரம் மக்களே... இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பத்திரமாக இருங்க மக்களே... இன்று தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, கேரளா மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதம் தமிழகத்தில், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். நாளை பிப்ரவரி 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாத நிலை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இன்று பிப்ரவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 31°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23°C ஆக இருக்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!