undefined

பத்திரம் மக்களே... மகாதீபம்.. பெளர்ணமி கிரிவலம்... திருவண்ணாமலைக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

 

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் விழா நாளை டிசம்பர் 3ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த முக்கியமான விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வானிலை ஆய்வு மையம் திருவண்ணாமலைக்கு இன்று (டிசம்பர் 2) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இத்தலத்திற்கு மிக முக்கியமான நிகழ்வாகும். தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், அண்ணாமலையார் கோயில் பகுதி, கிரிவலப் பாதை மற்றும் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டமாகக் காணப்படுகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாகத் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ரெட் அலர்ட் (அதி கனமழை): திருவள்ளூர் மாவட்டம். ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை): சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள். மஞ்சள் எச்சரிக்கை (கனமழை): வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி.

திருவண்ணாமலைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தீபத்திருவிழாவிற்காகக் குவிந்துள்ள பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று நாளை (டிசம்பர் 3) ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை): ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்கள்.

மஞ்சள் எச்சரிக்கை (கனமழை): சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்கள். நாளை (டிசம்பர் 3ம் தேதி) மகா தீபம் ஏற்றப்படவிருக்கும் நாளில், திருவண்ணாமலைக்கு மழைக்கான எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை. நாளை மழைக்கான எச்சரிக்கை இல்லாதது, பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றிச் சிறப்பாகத் தீபத்தைக் கண்டு கிரிவலம் செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்று விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கையின் காரணமாக, நகரில் உள்ளோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!