undefined

Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு - குழந்தையும் பலி!

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்றத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம் என்று நியுசவுத் வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். விடுமுறை நாளான நேற்று மக்கள் பலர் கடற்கரையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கூட்டத்தைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கோரத் தாக்குதலில் ஆரம்பத்தில் 10 பேர் பலியாகியிருந்த நிலையில், சற்று முன் வந்த தகவலின்படி பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 40 பேர் மருத்துவமனைகளில்ச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவில் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்."துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. காவல்துறை அதிகாரிகளுடன் பேசித் தகவல்களைப் பெற்று வருகிறேன். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம் அருகே உள்ள மக்கள் போலீசாரின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்."

தாக்குதல் காரணமாக போண்டி கடற்கரை மற்றும் சுற்றியுள்ள சாலைகள் இன்று (டிசம்பர் 15) மூடப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருக்கிறதா என்பது குறித்து ஆஸ்திரேலியப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!