undefined

 நாளை முதல்    நந்தனத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி… முதல்வர் தொடங்கி வைப்பு!

 

பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (ஜன.8) தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளையும் அவர் வழங்குகிறார்.

ஜன.8 முதல் ஜன.21 வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் 428 தமிழ் அரங்குகள், 256 ஆங்கில அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

புத்தகக் காட்சியில் ஏடிஎம், கார்டு ஸ்வைப்பிங், இலவச வைஃபை, சார்ஜிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறை, ஆதார் சேவைகள், சோலார் மின்சாரம் குறித்த அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. ஜன.12-ம் தேதி 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!