undefined

நாளை முன்பதிவு தொடக்கம்... ஊர் திரும்ப நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

 

பொங்கல் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோரின் கூட்ட நெரிசலைக் குறைக்க, நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு வரும் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 18ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் ஜனவரி 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும். வண்டி எண்: 06178 கொண்ட இந்தச் சிறப்பு ரயில் வழக்கமான பிரதான வழித்தடத்திற்குப் பதிலாக தென்காசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 15, வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய கவுண்டர்களில் தொடங்குகிறது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் முன்கூட்டியே தங்களின் பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!