காதலனின் மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை ... இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!  

 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தை சேர்ந்த நாகேஷ்யாதவ் என்பவரின் மனைவி மம்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாகேஷ்யாதவுக்கு திருமணத்திற்கு முன்பே அதே கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகவும், அது திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த குடும்பத்தினர் கண்டித்ததால் இருவரும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, மம்தாவை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று நாகேஷ் வீட்டிற்கு சென்ற சுஜாதா, வீட்டின் முன் 6 மாத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த மம்தா மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் மம்தா அலறியபடி, குழந்தைக்கு தீ பரவாமல் இருக்க அருகே தூக்கி வீசினார்.

சிறிது நேரத்தில் மம்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பிறகு சுஜாதா காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!