undefined

#BREAKING: அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ வழக்கு பதிவு.. ரூ.228 கோடி கடன் மோசடி புகார்!

 

தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்களுக்கு எதிராகப் பல்வேறு கடன் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (RHFL) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) பெற்ற ரூ. 228 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாதது மற்றும் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக, அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி உட்பட நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது சிபிஐ (CBI) வழக்கு பதிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (முன்பு ஆந்திரா வங்கி) ரூ. 228 கோடி கடனைப் பெற்றிருந்தது. இந்தக் கடனை நிறுவனம் முறையாகத் திருப்பிச் செலுத்தாததால், கடந்த 2019 செப்டம்பர் 30 அன்று இந்தக் கடன் வாராக் கடனாக வகைப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக யூனியன் வங்கி சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில், வங்கியில் பெற்ற கடனை உரிய நோக்கத்துக்காகப் பயன்படுத்தாமல், வேறு வகையில் முறைகேடாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (RHFL), அதன் இயக்குநர்களான ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ரவீந்திரா சரத் சுதாகர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!