undefined

BREAKING : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

 

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 79.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை துபாய் மருத்துவமனையில் காலமானார். 

முஷாரப் ஆகஸ்ட் 11, 1943ல் டெல்லியில் பிறந்தார். அதன் பின்னர் கராச்சியில் உள்ள செயின்ட் பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த முஷாரப், லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றார்.

இந்நிலையில், 2016ம் வருடம் மார்ச் மாதத்தில் சிகிச்சைக்காக துபாய்க்கு சென்றிருந்த முஷாரப், அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அமிலாய்டோசிஸ் எனப்படும் நோய் காரணமாக முஷாரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். 2019ல், சிறப்பு நீதிமன்றம் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும