undefined

வரிப்பணம் திரும்ப பெற லஞ்சம்...  உதவி ஆணையர் கணவருடன் கைது!

 

கோவை வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணிபுரியும் மகேஸ்வரி (48) லஞ்சம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர் அபினேஷ், அதிகமாக செலுத்திய இன்புட் வரியை திரும்ப பெற விண்ணப்பித்திருந்தார். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மகேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பேச்சுவார்த்தையில் 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ், கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் அவர் நேற்று சென்றார். அப்போது மகேஸ்வரி, பணத்தை தனது கணவர் தனசேகரன் (52) என்பவரிடம் கொடுக்க கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடிசியா மைதானம் அருகே காரில் காத்திருந்த தனசேகரனிடம் பணம் கொடுக்கப்பட்டதும் போலீசார் அவரை பிடித்தனர்.

விசாரணையில் தனசேகரன், மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!