undefined

10 தமிழக மீனவர்கள் பிரிட்டிஷ் கடற்படையினரால் கைது!
 

 

தமிழக மீனவர்களை  எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்  10 பேர்   தற்போது பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதன்படி டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை பிரிட்டிஷ் கடற்படையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து  மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!