பிராட்வே மூடல்… ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்துகள்  இயக்கப்படும்! 

 

பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் சனிக்கிழமை (ஜன.24) முதல் அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணாசாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள், புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் மற்றும் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, பின்னர் ராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல் மற்றும் உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, தங்களது வழக்கமான பாதைகளில் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!