திருமணத்திற்கு மறுப்பு... தங்கையை குத்தி கொன்ற அண்ணன்!
உத்தர பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டம் இடோரா கோட்டியா கிராமத்தைச் சேர்ந்த நைனா தேவி (22) என்பவர் திருமண வயதில் இருந்த நிலையில், குடும்பத்தினர் பல வரன்களை பார்த்தும் அவர் ஒவ்வொன்றாக மறுத்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி மனக்கசப்பு நிலவி வந்ததாக தெரிகிறது.
சமீபத்தில் நைனா தேவியின் அண்ணன் ஷேர் சிங், தனது தங்கையின் மொபைல் போனை பரிசோதித்த போது, பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனை குறித்து இருவருக்கும் விவாதம் ஏற்பட்டது. வாய்த்தகராறு தீவிரமடைந்த நிலையில், கோபக்குளத்தில் ஷேர் சிங் கூர்மையான ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தங்கையின் கழுத்தில் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரத்த குளத்தில் போன நைனா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியில் ஆழ்ந்த கிராம மக்கள் தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் வந்து ஷேர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த ஊரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!