undefined

தங்கையின் காதலனை கார் ஏற்றி நசுக்கி கொலை செய்த சகோதரர்கள்!

 
 

பீகார் மாநிலம் ஆராரிய மாவட்டத்தைச் சேர்ந்த சுல்பிகர், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் 19 வயது இளம்பெண் குஷ்பூவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது.

சமீபத்தில் வீட்டில் யாரும் இல்லை என குஷ்பூ அழைத்ததால் சுல்பிகர் அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த குஷ்பூவின் சகோதரர்கள் இருவரையும் பிடித்தனர். குஷ்பூ, சுல்பிகரையே திருமணம் செய்வேன் என உறுதியாக கூற, விசாரித்த சகோதரர்களிடம் சுல்பிகர் திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள், சுல்பிகரை தனியாக அழைத்து சென்று தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலை வெளியில் தெரியாத வகையில், உடலை தேசிய நெடுஞ்சாலையில் போட்டு வாகனம் ஏற்றி நசுக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் குஷ்பூ உட்பட மூன்று சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!