ரயிலில் ரீல்ஸ்… வடமாநிலத்தவர் மீது கொடூர தாக்குதல்.... கடும் கண்டனம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து வீடியோ எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை கீழே இறக்கி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள் பட்டாகத்தி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சம்பவம் தொடர்பாக நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு, ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிராஜ் பாதுகாப்பாக உள்ளதாகவும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!