undefined

புலம்பெயர் தொழிலாளி மீது  கொடூரத் தாக்குதல்... எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது. கஞ்சா போதையில் இருந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள், ரயிலில் பயணித்த சுராஜ் என்ற இளைஞரை ஆயுதங்களால் மிரட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்ததுடன், பின்னர் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது அவர்களின் கொடூர மனநிலையை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சுராஜ் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் வைரல் வீடியோக்களின் அடிப்படையில் நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர். சிறுவர்களாக இருந்தாலும், அச்சமோ இரக்கமோ இன்றி நிகழ்த்திய இந்த வன்முறை கடும் தண்டனைக்கு உரியது என எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தமிழகத்திலும் தலைதூக்குவது கவலை அளிப்பதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, சமூக வலைதள ரீல்ஸ் மோகத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உயர்தர சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!