undefined

 பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்... நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!

 
 

2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி தொடங்குகிறது. வழக்கம்போல், முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டு அவை நடைபெறுகிறது.

இந்த கூட்டு அவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கிறார். அதன் பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இதனை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் முதற்கட்டமாக பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!