undefined

"பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட்" - ப.சிதம்பரம்!

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, 'பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாத அறிக்கை' என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டார்.

மத்திய அரசு வெளியிட்ட 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) நிதியமைச்சரும், அரசும் படித்தார்களா என்பதே சந்தேகமாக உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10 முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்த பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து பட்ஜெட்டில் மெத்தனம் காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்: அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. இது குறித்து பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் இல்லை.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், அதைச் சமாளிக்க எந்தத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக அந்நிய நிறுவன முதலீடுகள் (FII) தொடர்ந்து வெளியேறி வருவதையும், அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) நிச்சயமற்ற தன்மையையும் நிதி அமைச்சர் கையாளத் தவறிவிட்டார் எனச் சாடினார்.

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மக்களின் குடிநீர் ஆதாரமான ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதி ₹67,000 கோடியிலிருந்து வெறும் ₹17,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள 'புதிய வருமான வரிச் சட்டம் 2026' நிறைவேற்றப்பட்ட சில மாதங்களிலேயே, மீண்டும் வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்திருப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றார். இது ஒரு முறையான கணக்காளரின் அறிக்கையாகக் கூட இல்லை என அவர் கிண்டல் செய்தார். மொத்தத்தில், இந்த பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டும், மக்களுக்கே புரியாத சுருக்கப்பெயர்களை வீசியெறியும் பொழுதுபோக்காகவும் மட்டுமே உள்ளது எனத் தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!