பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்... இந்திய வளர்ச்சியை பட்டியலிட்ட குடியரசுத் தலைவர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வேகமான முன்னேற்றத்தை கொடுத்த மறக்க முடியாத ஆண்டாக அமைந்ததாக தெரிவித்தார். வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாகவும், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் 95 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாகவும் கூறினார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு, பக்கிம் சந்திர சாட்டர்ஜி நினைவு, குரு தேஜ் பகதூரின் 350வது தியாக தினம், பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள், பூபன் ஹசாரிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்தார். இவை நாட்டில் ஒற்றுமையையும் இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வலுவடைந்துள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். உணவு தானிய உற்பத்தியில் சாதனை, மின் வாகன வளர்ச்சி, செமிகண்டக்டர் ஆலை, விண்வெளி முன்னேற்றம், 150 வந்தே பாரத் ரயில்கள், மெட்ரோ வளர்ச்சி மற்றும் புதிய பாம்பன் பாலம் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் வளர்ச்சி பயணம் தொடரும் என்றும், எதிர்காலம் மேலும் பிரகாசமாக இருக்கும் என்றும் அவரது உரை நம்பிக்கை அளித்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!