undefined

முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் மத்திய பட்ஜெட்...  தேர்தலையொட்டி தமிழகத்திற்கு சலுகைகள் அறிவிக்கப்படுமா?

 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் 2026–27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொழில் துறையினருக்கு வரிக் குறைப்பு மற்றும் ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஓட்டல் துறையில் ஜிஎஸ்டி நடைமுறைகளில் மாற்றம் செய்து, இன்புட் வரி கிரெடிட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் அறை வாடகை ரூ.300 முதல் ரூ.700 வரை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வில் உள்ள நிலையில், தங்க இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிவிலக்கு மற்றும் வீடு வாங்குவோருக்கான கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்த மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பின்னலாடை, தோல், காலணி, உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சாலை, ரயில், மருத்துவம் போன்ற துறைகளிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் ஒன்றிய பட்ஜெட் என்பதால், இன்றைய பட்ஜெட்டின் மீது நாடு முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!