பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்... அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!  

 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில், ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடைபெற்று, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. மத்திய அரசின் 2026–2027ம் ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதங்கள், கேள்வி நேரம், மசோதாக்கள் என கூட்டத் தொடர் பரபரப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மரபுப்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முக்கிய விவாதப் பொருள்கள், சட்ட மசோதாக்கள் மற்றும் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!