புர்கா போடல … மனைவி, இரண்டு மகள்கள் சுட்டுக் கொலை செய்த கணவன்... கொடூரம்!
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரூக் என்ற நபர் தனது மனைவியையும், இரண்டு மகள்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். கொலை செய்த பிறகு மூவரின் உடல்களையும் வீட்டுக்குள்ளேயே புதைத்துள்ளார். புர்கா அணியாமல் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதே ஆத்திரத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.
மனைவியை சுட்டுக் கொன்றதை மகள்கள் பார்த்துவிட்டனர். இதனால் உண்மை வெளிவரும் என பயந்த ஃபரூக், அவர்களையும் விடவில்லை. இரு சிறுமிகளையும் அடுத்தடுத்து சுட்டுக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
சுமார் ஆறு நாட்களாக மருமகளும், பேத்திகளும் காணவில்லை என ஃபரூக்கின் தந்தை போலீசில் புகார் அளித்தார். விசாரணை தீவிரமானதும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஆத்திரமும் அவமானமும் காரணமாக கொலை செய்ததாக ஃபரூக் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!