டபுள் டக்கர் சொகுசு  பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து உடல் நசுங்கி  2 பேர் பலி!

 


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு டெல்லியின் கரோல் பாக் பகுதியில் ஜண்டேவாலன் கோவில் அருகே நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த அதிவேகப் பேருந்து, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் மொத்தம் 25 பயணிகள் இருந்த நிலையில், 23 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், பேருந்தின் அடியில் சிக்கித் தவித்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கோர விபத்தில் சொகுசு பேருந்து முற்றிலும் சேதமடைந்து உருக்குலைந்து போனது. விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரின் தூக்க கலக்கமா அல்லது பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!