undefined

அரசுப் பேருந்தை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்.. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

திருநெல்வேலியில், சாலையில் முந்திச் செல்ல வழிவிடாமல் ஓட்டிச் சென்றதாகக் கூறி, அரசுப் பேருந்தை வழிமறித்த வேன் ஓட்டுநர் மற்றும் சிலர், பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி நேற்று இரவு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை அம்பை அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த தினகரன் (50) ஓட்டிச் சென்றுள்ளார். மேலப்பாளையம் அருகே சென்றபோது, இந்த பேருந்தை முந்திச் செல்ல ஒரு வேன் முயற்சி செய்துள்ளது. ஆனால், பஸ் டிரைவர் தினகரன் வழிவிடாததால், வேனால் முந்திச் செல்ல முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

அந்தப் பேருந்து மேலக்கருங்குளம் சோதனைச் சாவடி அருகே வந்தபோது, அந்த வேன் முந்தி வந்து பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. வேன் டிரைவரான வசவப்புரத்தைச் சேர்ந்த இசக்கிகுமார் மற்றும் அவருடன் வந்த சிலர் சேர்ந்து பேருந்து ஓட்டுநர் தினகரனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் பேருந்தின் பக்கவாட்டுக் கண்ணாடியும் உடைந்தது.

தாக்குதலில் காயம் அடைந்த பஸ் டிரைவர் தினகரன், ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அதே தாக்குதலின் போது காயம் அடைந்த வேன் டிரைவர் இசக்கிகுமாரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!