நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 18 பேர் பலி, பலர் படுகாயம்!
நேபாள நாட்டின் தாடிங் மாவட்டத்தில் கஜூரி அருகே இன்று அதிகாலை பேருந்து விபத்து நடந்தது. திரிஷுலி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 26 பேர் காயமடைந்தனர். பகுதி முழுவதும் சோகம் நிலவுகிறது.
அதிகாலை 1.30 மணியளவில் நகரிலிருந்து காத்மண்டு நோக்கி சென்ற பேருந்து பிருத்வி நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேபாள ராணுவம் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆண். காயமடைந்தவர்களில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பெண்களும் உள்ளனர். அதிக வேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!