பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.!
இந்தியாவில் நேற்று புதுடெல்லியில் பிரதமர் மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் சந்தித்து கொண்டனர். இது வெறும் மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்ல இந்த சந்திப்பின் போது, 2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், புத்தகம், நிலைத்தன்மை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உருவாக்குவது குறித்து முக்கியமான விவாதங்களை நடத்தியுள்ளனர்.
தொழிலதிபர் பில் கேட்ஸ், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் தொண்டு நிறுவனங்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியாவின் வளர்ச்சியில் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வருகிறார். அவரது அறக்கட்டளை இந்தியாவில் சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் பாலின சமத்துவம் போன்ற துறைகளில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பில் கேட்ஸ் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது பதிவில், “எப்போதும் போல, பில் கேட்ஸுடன் ஒரு அற்புதமான சந்திப்பை நடத்திப்பு நடந்ததாகவும், வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை போன்ற பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
இந்த சந்திப்பு இந்தியா தனது வளர்ச்சியின் மையத்தில் தொழில்நுட்பத்தையும் புதுமையையும் வைக்க விரும்புகிறது என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் நடைபெறும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முயற்சிகள் நாட்டிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு உத்வேகமாக உள்ளன என்பதையும் பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!