தொழிலதிபர் கடத்திக் கொலை... பெரும் பரபரப்பு! 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியனப்பள்ளி பகுதியில்  வசித்து வந்த தொழிலதிபர் 40 வயது கோபால் என்ற கோபி.  இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின்படி தொழிலதிபருக்கும் அவருடைய  சில நண்பர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை கோபால் தனது நண்பர் சதீஷுடன் காரில் ஆனெக்கல் நோக்கி சென்றபோது மர்ம நபர்கள் வாகனத்தை மோதச் செய்து இருவரின் முகத்திலும் ஸ்பிரே தெளித்து தாக்கியுள்ளனர்.

பின்னர் சதீஷை அங்கு விட்டுவிட்டு கோபாலை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனெக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் கிருஷ்ணகிரி அருகே கோபாலின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!