உலக சினிமாவின் மௌன மேதை பேலா தார் காலமானார்!
உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹங்கேரிய இயக்குநர் பேலா தார் (70) உடல் நலக்குறைவால் நேற்று (ஜன.6) காலமானார். அவரது மறைவு உலக சினிமா ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவமான திரைமொழியால் உலகம் முழுவதும் அவர் கவனம் பெற்றவர்.
7.5 மணி நேரம் ஓடும் ‘சடடாங்கோ’, ‘வெர்க்மெய்ஸ்டர் ஹார்மோனிஸ்’, ‘தி டரின் ஹார்ஸ்’ போன்ற படங்கள் உலக சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவை. ஹங்கேரிய சமூக வாழ்க்கை, அரசியல், மனித மனத்தின் அக வீழ்ச்சி ஆகியவற்றை ஆழமான காட்சிகளாக அவர் வடிவமைத்தார். மெதுவான காட்சிகள் மற்றும் மௌனமும் அவரது அடையாளமாக இருந்தது.
“சினிமா என்பது கதை மட்டுமல்ல; அது காட்சி, ஒலி, உணர்வு” என்பதே பேலா தாரின் நம்பிக்கை. ஒன்பது திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் இயக்கி பல சர்வதேச விருதுகளை வென்றார். உலக சினிமா ஒரு பெரிய கலைஞரை இழந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!