சி.ஏ. தேர்வு தேதி ஒத்திவைப்பு... பொங்கலன்று நடக்க இருந்த தேர்வு ஜன.19ம் தேதிக்கு மாற்றம்.. ஐ.சி.ஏ.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ICAI) வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த சி.ஏ. இடைநிலைத் தேர்வின் தேதியை மாற்றியமைத்துள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15, 2026 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சி பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதே நாளில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக, பொங்கல் பண்டிகை அன்று தேர்வு வைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடவும், தேர்வில் பங்கேற்கவும் சிரமம் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த டிசம்பர் 18-ம் தேதி இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்திற்குத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத் தேர்தலை முதன்மைக் காரணமாகக் காட்டி, மாணவர்களின் நலன் கருதி அன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைப்பதாக ஐ.சி.ஏ.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட தேதி: ஜனவரி 15 என்ற நிலையில், மாற்றப்பட்ட புதிய தேதி ஜனவரி 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலைத் தேர்வு (குரூப்-II), தாள்-5: தணிக்கை மற்றும் நெறிமுறைகள் (Auditing and Ethics).
ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த இந்த ஒரு பாடத்திற்கான தேர்வு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேதிகளில் நடைபெறவிருக்கும் இதர சி.ஏ. தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும் என்றும் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்வு மையங்கள் மற்றும் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் ஐ.சி.ஏ.ஐ.-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!