இடைக்கால பட்ஜெட் அம்சங்கள் குறித்து நாளை அமைச்சரவை கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!