undefined

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்துக்கு மற்றொரு வழி அமைக்கலாமா? நீதிமன்றம் கேள்வி!

 

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனை  எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீது  பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை   நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கால பூஜைகளுக்கு இடையில் கனக சபையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும்  இதற்கு ஏதுவாக சாய்வு தல பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் பக்தர்கள் சுவாமிக்கு எதிரில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு ஓரத்தில் தரிசனம் செய்து கொள்ள அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.  

நீதிபதிகள், கோவில் திறந்திருக்கும் 11 மணி நேரத்தில், ஆறு கால பூஜைகள் பால் நெய்வேத்தியம் போன்ற பூஜைகள் 8 மணி நேரம் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 3 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய ஏதுவாக, ஒரே வழியில் சென்று வருவதை தவிர்த்து கூடுதல் வழியை ஏற்படுத்துவது குறித்து கட்டிடக்கலை வல்லுனர்களுடன் ஆலோசித்து திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என  பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் மீதான  விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் தனது கருத்துக்களை மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?