கனடாவுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்… 50% வரி விதிப்பதாக எச்சரிக்கை!
அமெரிக்கா – கனடா இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் வழங்கப்பட்ட சான்றிதழ்களை அமெரிக்கா ரத்து செய்யும் என்றும் அறிவித்தார். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, மேற்கு கனடாவில் எண்ணெய் வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், “கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!