கனடா விமானங்களுக்கு 50% வரி... ட்ரம்ப் எச்சரிக்கை!
சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். கனடா அந்த நடவடிக்கையில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
இதில் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்கள் சம்பந்தப்பட்டு, கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்ற காரணத்தால், அமெரிக்காவில் விற்பனை செய்யும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். பம்பார்டியர் நிறுவனம் தயாரிக்கும் 150 குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்ப்ஸ்ட்ரீம் விமானங்கள், பம்பார்டியர் நிறுவனத்திற்கு போட்டியாக இருப்பதால், கனடா அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!