கஞ்சா போதையில் அடாவடி.. மகனை அடித்தே கொன்ற தந்தை!
கஞ்சா பழக்கத்தால் நிச்சயதார்த்தம் நின்ற ஆத்திரத்தில் குடும்பத்தினருடன் சண்டையிட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சோகமான சம்பவம் ஓவர்டன் பேட்டை பகுதியில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம், ஓவர்டன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரது மகன் வெஸ்லி (29). ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நேற்று நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக பெண் வீட்டார் வெஸ்லியைப் பற்றி விசாரித்தபோது, அவருக்குக் கஞ்சா பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், போதைக்கு அடிமையானவருக்குப் பெண்ணைத் தர முடியாது என கூறி நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்தனர்.
திருமணம் நின்றதால் ஆத்திரமடைந்த வெஸ்லி, போதையில் வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தினரிடம் சண்டையிட்டுள்ளார். தனது போதைப் பழக்கத்தைப் பெண் வீட்டாரிடம் தனது குடும்பத்தினர்தான் போட்டுக்கொடுத்ததாகக் கூறி, தந்தை ஜான்சன் மற்றும் உறவினர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மகனின் அத்துமீறலால் ஆத்திரமடைந்த தந்தை ஜான்சன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வெஸ்லியைத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வெஸ்லி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.போலீஸ் நடவடிக்கை
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், வெஸ்லியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொலை செய்த தந்தை ஜான்சனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!