கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு!
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் நீண்டநாள் தலைமறைவாக இருந்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் (24), சுமார் ஒரு கிலோ கஞ்சாவுடன் சனிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய இவர், காவலர்களை கத்தியால் மிரட்டியிருந்ததால், கஞ்சா மறைத்து வைத்த இடத்தை காட்ட ஞாயிற்றுக்கிழமை காலை போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
மாரியப்பாநகர் அருகிலுள்ள முட்புதர் பகுதியில் தேடுதல் ஆரம்பித்த சில நொடிகளில், திடீரென மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியை எடுத்து, காவலர் அய்யப்பனை நோக்கி நவீன் தாவியதால் பதற்றம் ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் அம்பேத்கர் பலமுறை எச்சரித்தும் நவீன் அடங்காமல் போலீசரை வெட்ட முனைந்ததால், அவரை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
இதில் நவீன் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த காவலர் அய்யப்பனும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சிதம்பரம் முழுக்க பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!