தடுப்புச் சுவரில் கார் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று மாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ், பரத், அர்ஜுன், ஜனக் மற்றும் அமிதா ஆகிய 5 பேர், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவிலிருந்து அரியானாவின் டப்வாலி நகரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பதிண்டா மாவட்ட நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த சிமெண்ட் தடுப்புச் சுவர்மீது பயங்கர வேகத்தில் மோதியது.
உயிரிழந்தவர்களில் அமிதா என்ற இளம்பெண் குஜராத் மாநிலக் காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!