பிரியாணி கடைக்குள் பாய்ந்த கார்... அறந்தாங்கியில் பரபரப்பு!
Feb 4, 2026, 10:36 IST
அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வேகமாக வந்த கார் கடைக்குள் புகுந்ததில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக கடையிலிருந்தவர்களுக்கும், சாலையில் சென்றவர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் வெங்கடேசன் மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!