கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி!
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (50) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (41) ஆகியோர் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி – புதிய திருப்பூர் சாலையில் சேலம்–கொச்சி புறவழிச்சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணிவண்ணன், ராகேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த பெருமாநல்லூர் காவல் துறையினர் உடல்களை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!