லாரி மீது கார் மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் , முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி கோர விபத்திற்குள்ளானதில் வாகனம் சுக்குநூறாய் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, உறவினர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து காவல்துறை விசாரணை தொடங்கியுள்ள நிலையில், அதிக வேகமா காரை ஓட்டியதா? அல்லது காரில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததா என்ற கோணத்தில் ஆய்வு நடக்கிறது. சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விபத்து பயணிகளுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!