undefined

 கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்து... 45 சவரன் நகைகள் மீட்பு!

 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5பேர் உயிரிழந்த நிலையில், கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழநதனர். அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் சுமார் சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. உள்ளூரில் இருந்து மோட்டார் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து நீர் முழுமையாக அகற்றப்பட்டது. அதன் பிறகு கிணற்றுக்குள் இறங்கிய   தீயணைப்பு வீரர் கிணற்றுக்குள் கிடந்த இரு பைகளை மீட்டு  மேலே அனுப்பினார்.

அதன்படி கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து சுமார் 35 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா,  சாத்தான்குளம் காவல்துறை சார்பாக உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வராஜ், காவலர் ஆனந்தகுமார் மற்றும் பலர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு நகைகளை மீட்ட தீயனைப்பு படை வீரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வருவாய் துறையினற்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது