சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பக்தர்கள், தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். சேலத்தில் இருந்து வந்த பக்தர்களும் இணைந்து, இன்று அதிகாலை பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மேம்பாலம் தாண்டி சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தனர். இந்த குழுவில் சுமார் 60 பேர் இருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. தடுப்புக் கட்டையில் மோதிய கார் அங்கேயே நின்றது. இந்த விபத்தில் மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த சித்ரா, ஜோதிலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் சித்ரா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!