பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதல்… 3 பெண்கள் பலி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த ஏராளமானோர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பயணம், பக்தர்களிடையே பக்தி உற்சாகத்துடன் தொடர்ந்தது.
தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில், குறுக்குச்சாலை அடுத்துள்ள பாலம் அருகே நேற்று மாலை சென்றபோது விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. அந்த இடமே சோகக் காட்சியாக மாறியது.
இந்த விபத்தில் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள் (55), கரம்பாவிளையைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரான தஞ்சாவூர் வடக்கு கேட் பகுதியை சேர்ந்த ராம் பிரசாத் (32) என்பவரை கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!