undefined

 கார் பிளாட்பாரத்தில் மோதியதில் தொழிலாளி பலி!  

 

சென்னை தேனாம்பேட்டையில் கட்டுபாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த தொழிலாளி உயிரிழந்தார். மேலும் மூன்று தொழிலாளிகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
சென்னை நந்தனம் எஸ்எம். நகரில் வசித்து வருபவர் பாபு.  இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர், தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார்.  நேற்று இரவு டீ குடித்துவிட்டு பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த போது  அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் மோதியது. இதில் அங்கு அமர்ந்திருந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


அங்கு நின்று கொண்டிருந்த அலங்கார விளக்குகள் கடையில் பணிபுரிந்த   ஊழியர்கள் ரித்தேஷ் (45) விக்ரம் (28) தருண் சோலங்கி (31  மூன்று பேரும் படுகாயம் அடைந்து  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய தனியார் கூரியர் நிறுவன மேலாளர் அபிஸ் மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த அகமது  என்பவரை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிய அபிஸ் குடிபோதையில் இல்லை என தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?