undefined

600 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து... 6 பேர் பலி!

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று 600 அடி ஆழப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியைச் சேர்ந்த 6 பேர் நேற்று மாலை ஒரு காரில் கல்வான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். கல்வான் அருகே உள்ள மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!