ஏலக்காய் விலை சரிவு.... கிலோக்கு 150 ரூபாய் குறைவு!
இடுக்கி ஏலக்காய் சந்தையில் ஏலக்காய் விலை கிலோக்கு சுமார் 150 ரூபாய் வரை குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரே நாளில் நடைபெறும் வர்த்தக மதிப்பு சுமார் 1.50 கோடி ரூபாய் வரை குறைந்ததாக கூறப்படுகிறது. சந்தைக்கு நாள்தோறும் ஒரு லட்சம் கிலோக்கும் மேல் ஏலக்காய் வரத்து இருப்பதால் இந்த மாற்றம் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக விலை சரிவு தொடர்ந்து காணப்படுகிறது.
கவுதமாலா நாட்டில் உற்பத்தி குறைந்ததால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்திய ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைத்தது. அப்போது ஏற்றுமதி விலை கிலோக்கு 2,600 முதல் 2,950 ரூபாய் வரை இருந்தது. உள்நாட்டிலும் 2,400 முதல் 2,600 ரூபாய் வரை விற்பனை நடைபெற்றது. ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி நடைபெறும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் உருவான போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கிடைத்த ஆர்டர்களுக்கும் பொருட்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் தற்போது ஏலக்காய் கிலோவுக்கு சராசரியாக 2,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் உள்நாட்டில் தேவை இருப்பதால் இந்த விலை சில காலம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!