undefined

 ரூ.1 லட்சம் பரிசு... பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

 
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு,  பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், திராவிட இயக்கத்தின் புரட்சி கவிஞர் அவர்களை போற்றும் வகையில் "தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் / கவிஞர் என இருவர் தெரிவு செய்யப்பட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது" வழங்கி விருது தொகை தலா ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.

அந்த வகையில் பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 23.05.2025 என ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20.06.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆண் மற்றும் பெண்  இளம்எழுத்தாளர் / கவிஞர் பெருமக்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் https://awards.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர்,

சென்னை - 600 008. என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ 20.06.2025ம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். 

கூடுதல் விவரம் அறிய விரும்புவோர் 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது