2027-ல் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளுக்காகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புக்காக ரூ. 11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இந்தக் கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஒரு முக்கியமான அறிவிப்பு. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது மீண்டும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த முறை சாதிவாரியான கணக்கெடுப்பும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார். "இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை" என்று அவர் கூறினார். இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!