122 மீட்டர் உயரத்தில் இருந்து கேட்ச்... ஜோஸ் பட்லர் கின்னஸ் சாதனை குவிப்பு!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற சவாலில், தரையில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் ட்ரோனில் இருந்து வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை அவர் லாவகமாக கேட்ச் பிடித்தார். இந்த அதிரடியான முயற்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
முன்னதாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் 119.86 மீட்டர் உயரத்தில் இருந்து கேட்ச் பிடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பட்லர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவரது அபார திறமைக்கு ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்களும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!