அட... ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் காலிஃபிளவர்!
கொடைக்கானலில் கலர், கலராக வண்ணமான காலிஃபிளவர் சாகுபடி செய்து விவசாயி பிரபு அசத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் செண்பகனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த இவர், வெளிநாட்டிலிருந்து விதைகளை கொண்டு வந்து தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலமாக பிரபலமாக இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து இந்த வண்ண காலிஃபிளவரைப் பார்க்கின்றனர். மலைக்கிராமங்களில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
விவசாயி பிரபு கூறியதாவது, "வெள்ளை நிற காலிஃபிளவரை விட பல வண்ணங்களில் விளையும் காலிஃபிளவர் நல்ல சுவையையும், அதிக லாபத்தையும் தருகிறது. ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் விளைந்த காலிஃபிளவரை பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்குகின்றனர்."
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!