undefined

கரூர் விவகாரம்... விஜய்யிடம்  சிபிஐ விசாரணை நிறைவு! 

 

 

கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 12ஆம் தேதி விஜய்க்கு முதல் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பொங்கல் விடுமுறை காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்பேரில் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜரானார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் பிரசாரம் ஏன் தொடரப்பட்டது, அனுமதியை மீறி கூட்டம் அதிகமாக வந்தது எப்படி, தண்ணீர் பாட்டில் வீசியபோது நிலைமை தெரியவில்லையா, வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு “தமிழக போலீசாரை முழுமையாக நம்பினேன். அவர்களது வழிகாட்டுதலின்படியே செயல்பட்டேன்” என்று விஜய் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளித்த விஜய், சில கேள்விகளுக்கு அவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!